திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு கொரோனா காரணமாக வர முடியாமல் போனால் அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனமான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டை, ஏப்ரல் 30ஆம் தேதி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா காரணமாக வர முடியாமல் போனால் அடுத்த 90 நாட்களுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.