ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் தன்னை மிரட்டுவதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் குற்றம் சாட்டி உள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ் தேசிய இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்க்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். அதில் ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா மையத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழ் வழி பூஜையும், குடமுழுக்கு நடைபெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன், ஜக்கி வாசுதேவ் ஈஷா அறக்கட்டளை சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்ட ஒருங்கிணைப்பாளரான என்மீது ஜக்கி வாசுதேவ் அமைப்பை சேர்ந்தவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தொலைபேசியில் வன்முறையாக மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.