எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால் தான். அதில் எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஏன்னெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். முன்னொரு காலத்தில் மாட்டு பால் மட்டும்தான் இருந்தது. இப்போது அந்த பாலையே பதப்படுத்தப்பட்டு மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் என பல வகைகளில் விற்கின்றனர்.
போஸ்ட ரைஸ்ட் மில்க் இல் அதிக வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு இந்த பால் உருவாகின்றது. எனவே இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பாலை குடிக்கலாம்.
ஹார்மோனல் பால் இதில் உள்ள கொழுப்புகள் உடைக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது. இந்த பாலின் மேற்பகுதி கிரீமி தன்மையுடன் இருக்கும். இதிலும் எந்தவித பாதிப்பும் கிடையாது.
ஃபுல் க்ரீம் மில்க் பாலில் கொழுப்பு உள்ளடக்கம் அகற்றப்படாமல் பேக் செய்யப்படும். முழு கொழுப்பும் இருப்பதால் 150 கலோரிகள் இதில் உருவாகிறது.
பால் ஆடை நீக்கப்பட்ட பாலில் சுமார் 80 சதவீத கலோரிகள் கொண்டிருக்கும். இது டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த பால்.
டோன்ட் மில்க், இதில் மூன்று சதவீதம் கொழுப்பு இருக்கும். இது பாலில் தண்ணீர் சேர்ப்பதால் அடர்த்தி குறைகிறது. இதன் மூலம் அளவு அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். இதுவும் நல்லது.
டபுள் டோன்ட் மில்க் இந்த வகை பாலில் தண்ணீர் மற்றும் பால் ஆடை நீக்கிய பால் பவுடர் கலக்கப்படும். 90 சதவீத கொழுப்பு இதில் உள்ளது. இதய நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்தது.
எருமை பாலில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது. இனிப்புகள், கோயா, பன்னீர் போன்ற பொருள்கள் தயாரிப்பதற்கு இது சிறந்தது.
பசும்பால் பசும்பாலில் விட்டமின் டி, புரோட்டின், வைட்டமின் பி போன்ற தாதுக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது. எளிதில் ஜீரணிக்கக் கூடியது. பார்ப்பதற்கு அடர்த்தியாகவும், குறைந்த க்ரீமி தன்மையுடன் இருப்பதால் பிறந்த குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.