சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி போட்டு இருந்தாலும் பயணம் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். கண்டிப்பாக செல்வதாக இருந்தால் இந்தியா செல்லும் முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.