Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட முயற்சிக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மின் மோட்டாரை திருட முயற்சித்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகர் பகுதியில் எம்.குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்து தொழிலாளர்கள் சென்ற பிறகு இரவு நேரத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலாளி மின்மோட்டார் அருகே வாலிபர் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் வேலாயுதம் என்பதும், கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்று இரும்பு கம்பிகள் மற்றும் மின் மோட்டார் போன்றவற்றை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு இந்த வாலிபர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனையடுத்து மின் மோட்டாரை திருட முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்து விட்டார் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |