Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு என்னதான் பிரச்சனை… தொழிலாளியின் கொடூர செயல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

குடிபோதையில் கட்டிட தொழிலாளியை குத்தி கொலை செய்துவிட்டு சக தொழிலாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஒன்பதாவது விதி பகுதியில் புதிய கட்டிட பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் மொய்தீன் என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் துரை என்பவரும் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது குடிபோதையில் இருந்த துரை மொய்தீனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த மொய்தீனை  அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோவை காட்டூர் காவல்துறையினர் மொய்தீனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய துரையை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |