ராணிப்பேட்டையில் காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் காவல்துறை ஏட்டாக சுரேஷ்குமார் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் காவல் நிலைய பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது அறைக்கு செல்வதாக கூறினார். அதன்பின் அவரது மகள் சுரேஷ்குமாரின் அறையை திறக்க முயற்சித்தபோது கதவை உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளார். இதையடுத்து அவரது மகள் ஜன்னல் வழியாக அறையினுள் பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தெரிய வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.