சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகொட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் 445 பேர் தனியார், அரசு மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.