Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 10 மாசம் தான் ஆகுது..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திருமணமாகி 10 மாதத்தில் இளம்பெண் எலி பேஸ்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூத்தாடி அம்மன் கோவில் தெருவில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் பாரதி என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேங்கைபட்டியில் உள்ள முருகேசன்-லட்சுமி தம்பதியின் மகளான புவனேஸ்வரியுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புவனேஸ்வரிக்கும், ரமேஷ் பார்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

அதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புவனேஸ்வரியின் தாய் லட்சுமி சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி பத்து மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |