நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 நாள் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், முதல்மைல், பந்தலூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்துவருவதன் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் முக்கிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்மைல் மற்றும் அருகில் இருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளிலிலும் விவசாய நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.முதல்மைல் கொக்ககாடு பகுதிகளிலும் வீடுகளுக்குள் புகுந்திருக்கும் வெள்ளநீரை அப்புறபடுத்தும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
வீடுகளில் பாதி அளவுக்கு வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு குடியேறியுள்ளனர். வருவாய்த்துறையினர் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து மீட்பு நடவடிக்கைகளை தூரிதப்படுத்தியுள்ளனர். தற்போது சில மணி நேரம் மட்டும் மழை இல்லாத பட்சத்தில் மழை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அப்போது வெள்ள பெருக்கு ஏற்பட்டு மீண்டும் கிராமங்கள் பாதிக்கப்படும் நிலையில் அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.