பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 8 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,409 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,355 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 52 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.