சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மின் வினியோகம் இன்று இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. எனவே உதயாச்சி, தேவகோட்டை டவுன், எழுவன்கோட்டை, உடப்பன்கோட்டை, காரை, கண்ணங்கோட்டை, வேப்பங்குளம், நானாகுடி, கோட்டூர், கல்லங்குடி, அனுமந்தகுடி, திருமணவயல், ஊரணிகோட்டை, நாகாடி, மாவிடுதிக்கோட்டை, பனங்குளம், புளியால், காயாவயல், ஆறாவயல், கண்டதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் வினியோகம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது. மின்வாரிய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்தனர்.