ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான நவல்னி கைதிகளுக்குகாக அமைக்கப்பட்டிருக்கும் சுகாதார மையத்திற்கு செல்வார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மருத்துவர்கள் கூறியதையடுத்து உணவருந்த சம்மதம் தெரிவித்த நிலையில், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்கிடையே இவர் தனியார் மருத்துவர்களின் சிகிச்சை பெறுவதற்கு சிறைத்துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் கடந்த 3 வாரங்களாக இவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இவருடைய தனிப்பட்ட மருத்துவர் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியாவது, 44 வயதாகின்ற நவல்னியின் உடல் நலம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலையை அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு தொடர்ந்து சென்றால் அவர் இறப்பதற்கு கூட வாய்ப்புள்ளதாகவும் அதில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து உலக நாடுகள் நவல்னிக்கு ஏதாவது நேர்ந்தால் அரசு பதிலளிக்க வேண்டும் என்று எச்சரித்த பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.