Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட திரைப்பிரபலங்கள்…. ஜோடியாக மாலத்தீவு சுற்றுலா….!!!

கொரோனாவில் இருந்து மீண்ட உடன் திரைப் பிரபலங்கள் ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகை, நடிகராக வலம் வருபவர்கள் அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். காதல் ஜோடியாக வலம் வரும் இவர்கள் கடந்த ஆண்டே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவந்த ரன்பீர் கபூருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து ஆல்யா பட்டிற்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இவர்கள் மருத்துவர்களின் அறிவுரை பெயரில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இருவரும் தற்போது ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

Categories

Tech |