கொரோனா பரவல் காரணமாக வாழை இலை மற்றும் வாழை மரங்களின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வாழைமரங்களை தங்களின் நிலத்தில் விளைவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் விவசாயிகள் கடும் சிக்கலிற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் வாழை மரம் மற்றும் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா பரவலினால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில் திருவிழாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாழை மரங்கள் மற்றும் இலைகளின் விற்பனை சரிவடைந்து விலையும் குறைந்துவிட்டது. ஒரு கட்டு வாழை இலை 1500 ரூபாய்க்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்த நிலையில் தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.