Categories
உலக செய்திகள்

கொரோனா அபாயம் நிறைந்த நாடுகள்.. அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. பிரபல நாடு அறிவிப்பு..!!

சுவிற்சர்லாந்து சுகாதார அமைச்சகமானது, கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  

சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைச்சகம் கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் புதிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து விமானத்தில் சுவிற்சர்லாந்திற்கு பயணம் செய்யும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

இது மட்டுமல்லாமல் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகே  அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இந்த பட்டியலில் தற்போது கனடாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் சுமார் 45 நாடுகள் இடம் பெற்றிருக்கிறது.

Categories

Tech |