Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இந்த டைம்ல நிழல் விழாது… அரிய வானியல் நிகழ்வு… கணக்கிட்ட பள்ளி மாணவர்கள்…!!

கோத்தகிரியில் பள்ளி மாணவர்கள் நிழல் விழாத நேரத்தை கணக்கீடு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் பூஜ்ஜிய நிழல் என்ற அரிய வானியல் நிகழ்வு நடந்துள்ளது. அது என்னவென்றால் குறிப்பிட்ட பகுதியில் சூரியனானது தொடுவானத்திற்கு நேர் செங்குத்தாக வரும் சமயத்தில் நிழல் விழுவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கே.கே.ராஜூ வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்கள் இது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

இதனை அடுத்து சில பொருட்களின் நிழல்களின் நீளங்களை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை காலை 11 மணி முதல் கணக்கிட்ட போது மதியம் 12:23 மணிக்கு பூஜ்ய நிழல் நிகழ்வு நடந்துள்ளது. இதனை தொடர்ந்து சூரியனின் சுற்றுப்பாதை கணக்கிடும் முறை மற்றும் பூமியின் பரப்பளவு, சுற்றளவு கணக்கிடும் முறை போன்றவற்றை மாணவர்கள் சிறப்பாக கற்றுக் கொண்டனர்.

Categories

Tech |