அத்திவரதர் வைபவ நிகழ்ச்சி நடைபெறும் 3 நாட்கள் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முதல் நாளிலிருந்தே அத்திவரதரை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் வருகின்ற 13-ஆம் தேதி முதல் 16_ஆம் தேதி வரை அத்திவரதர் வைபவம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
இதற்காக இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அத்திவரதர் வைபவ நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் அத்திவரதர் வைபவம் நிகழ்ச்சியை முன்னிட்டு காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வருகின்ற 14, 14,15 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.