நகைச்சுவை நடிகரான விவேக் கடைசியாக இந்தியன் 2 படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் எவராலும் நிரப்ப முடியாத இடத்தை பெற்றவர் நடிகர் விவேக். தனது நகைசுவை மூலம் பல சமூக சிந்தனைகளை ஏற்படுத்தியுள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகத்தை மட்டுமல்லாது அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான ரசிகர்களும், பல்வேறு நடிகர்களும் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் விவேக் உடன் பயணித்த நாட்களையும், அவருடன் இருந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் கடைசியாக இந்தியன்2 படப்பிடிப்பு குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதில் இயக்குனர் சங்கர், பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.