Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு…. வெளிய போகாதீங்க…. 8 மணிக்கு மேல் பேருந்துகள் கிடையாது….!!

குமரி நெல்லை இடையே இயங்கும் பேருந்துகள் இன்று இரவு 8 மணிமுதல் நிறுத்தப்படுகிறது.  

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்படுகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் கன்னியாகுமரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குமரியில் வாடகை கார், ஆட்டோ போன்றவைக்கும் இரவு நேரத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 770 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதில் 440 பேருந்துகள் மாவட்டத்திற்குள் இயங்குகின்றன. மீதமுள்ள 330 பேருந்துகள் வேறு மாவட்டங்களுக்கு இயங்குகின்றன. நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு இரவு முழுவதும் பேருந்து வசதிகள் இருக்கும். அதேபோல் நெல்லையில் இரவு 8 மணிவரை இடைநில்லா பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இன்று முதல் போக்குவரத்து வசதிகள் முழுவதுமாக  ரத்து செய்யப்படுகிறது .

Categories

Tech |