தேனியில் சிறுவனிடமிருந்து தங்கத்தாலான தாயத்தை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் வருசநாட்டில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர், தனது பேரனான அகிலேஷ் என்பவருடன் அவரது உறவினருடைய திருமண விழாவிற்கு சென்றுள்ளார்கள். அப்போது அகிலேஷ் அப்பகுதியிலிருக்கும் சில நண்பர்களுடன் சேர்ந்து முல்லைப்பெரியாற்றினுள் குளிக்க சென்றுள்ளான்.
இதனையடுத்து அங்கு வந்த 2 நபர்கள் அகிலேஷ் அணிந்திருந்த தங்கத்தாலான தாயத்தை பறித்து சென்றுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் வசித்து வந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.