தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். பின்னர் வாக்குபதிவு முடிந்ததையடுத்து வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது .இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அனுமதி இன்றி எல்இடி டிவி கிளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வாக்குபதிவு எண்ணும் மையத்திற்கு வந்து உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பகுதியில் அனுமதி வழங்காத நிலையில் லாரி புகுந்துள்ளதால் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் கூறுகையில், “வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழந்து போவதும், கண்டெய்னர் லாரிகள் வருவதும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. வாக்கு மையத்தை சுற்றி பல்வேறு மர்மமான நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார்.