பணக்கார பெண்ணும் நடிகையுமான ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோய் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இவர் மரணமடைந்த தகவலை இவருடைய கணவரான டேமியன் லீவிஸ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் இணையதளத்தில் கூறியதாவது “எனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிவரை வீரமுடன் போராடி அமைதியான முறையில் மரணித்துள்ளார். அவளை எங்கள் வாழ்வில் பெற்றது நாங்கள் செய்த அதிர்ஷ்டம் ஆகும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஹெலன் மெக்ரோரி லண்டனில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவர். இவருடைய சொத்து மதிப்பு $25 மில்லியன் என தெரியவந்துள்ளது. இவருடைய மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.