காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொரோனா தொற்று மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு தலைவர்கள். பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து லேசான அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாவும், அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.