Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலை மறுத்த பெண்…. இளைஞர் செய்த விபரீத காரியம்…. போலீஸ் விசாரணை….?

காதலித்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணக்கோடு கிராமத்தில் ராஜன் என்பவர்க்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ராஜன் மற்றும் அவரது மனைவி இறந்து விட்டதால் அவரது இரண்டு மகன்களும் ராஜனின் தங்கை ரோசியின் வீட்டில் வளர்ந்து வந்தனர். இரண்டு மகன்களில் ஒருவரான ரெதீஷ் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிய அவர் தனது வீட்டின் அருகே கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே ரெதீஷ் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரெதீஷ்க்கு அவரது நண்பர்கள் ஆறுதல் சொல்லி வந்தனர். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற ரெதீஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ரோசியின் கணவர் சதீஷ் அவரை வேலைக்கு அழைத்து செல்லவதற்காக சென்றபோது ரெதீஷ் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |