தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது. தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.