Categories
உலக செய்திகள்

எந்த வழியாகவும் இங்க வரக்கூடாது…. இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை…. அண்டை நாட்டின் அதிரடி உத்தரவு….!!

இந்தியர்கள் 2 வருடங்கள் பாகிஸ்தானிற்குள் நுழையக் கூடாது என அந்நாடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,59,170 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,761 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே பிரித்தானியாவின் கொரோனா பட்டியலில் இந்தியா சிவப்பு இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்ட double mutant என்ற கொரோனாவினுடைய மாறுபாடு பாகிஸ்தான் நாட்டிற்கு பரவாமலிருக்க அந்நாடு சில தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இந்தியாவிலிருந்து விமானம் மூலமாகவோ, சாலை வழியிலோ பாகிஸ்தானிற்குள் 2 வருடங்கள் செல்லக்கூடாது என்று அந்நாட்டின் தேசிய அளவிலான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டிற்கான மையம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |