பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது மகாராணியார் தனிமையில் அமர்ந்து இருந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் 73 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த கணவரை பிரிந்த நிலையில் இறுதி சடங்கில் மஹாராணியாருக்கு ஆறுதல் கூற கூட யாரும் இல்லாமல் தனியாக அமர்ந்திருந்த காட்சி நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து மதத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் 21ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், இதனை மாற்ற வேண்டும் என பல கட்சி உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இது போன்ற துயர நிகழ்வுகளில் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மனிதத்தன்மையற்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.