Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் படமும் , காஷ்மீர் பிரச்சனையும் … கவிதையாக பார்த்திபன் ..!!

அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தையும் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டதையும் இணைத்து ஒரு கவிதையாக பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 ஹச் .  வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர் கொண்ட பார்வை. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து  , நடிகர் பார்த்திபன் படத்தை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில்  அஜித் படத்தின் ரிலீஸ்சையும் ,  சமீபத்தில் நடைபெற்ற  காஷ்மீர் பிரச்சனையும் புத்திசாலித்தனமாக இணைத்து ஒரு கவிதையாக  பார்த்திபன்  சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் .

Image result for parthiban ajith

அந்த கவிதையானது : 

நேரு கொண்டப் பார்வை

காங்கிரஸ் கொண்டப் பார்வை

பிஜேபி  கொண்டப் பார்வை

காஷ்மீர் மக்கள் கொண்ட  பார்வை

பார்வைகளின் கோணங்கள் நேர் மாறாக

‘நேர் கொண்டப் பார்வை’ 

பெண்களுக்கான நியாயத்திற்காக.

Image result for nerkondaparvai

மேலும் ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித்  அவர்களை நானும் அவரின் தலையாய ரசிகர்களோடு பாராட்டுகிறேன் என  குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அஜித் படத்தின் ரிலீஸ்சையும் , காஷ்மீர் பிரச்சனையும் புத்திசாலித்தனமாக ஒரே கவிதையில் இணைத்த பார்த்திபனுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |