ஒரே நாளில் திருப்பத்தூரில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நேற்று திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 35 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.