Categories
உலக செய்திகள்

படுக்கையிலிருந்து எழுந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்…. பழுது பார்க்கும் பணிக்காக அனுப்பப்பட்டது…. பின் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்….!!

பெண் ஒருவர் மூன்று பேருக்கு தனது நிர்வாண புகைப்படத்தை தவறுதலாக அனுப்பியுள்ளார்.

பக்கிங்காம் பகுதியில் Roseanne என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பழுதுபார்க்கும் வேலை இருப்பதால் அந்த இடத்தை புகைப்படம் எடுத்து பழுதுபார்க்கும் பணியாளர்கள் மூவரிடம் அனுப்பியுள்ளார். அந்த இடத்தை பழுதுபார்ப்பதற்கு யார் குறைவாக பணம் கேட்கிறார்களோ அவருக்கு அந்த வேலையை கொடுப்பது என அவர் திட்டமிட்டிருந்தார். அதன்பின் அந்த மூவருக்கும் அவர் அந்த புகைப்படத்தை அனுப்பி இருந்தார்.

அதில் ஒரு நம்பர் “இதில் ஏதோ தவறு இருக்கிறது. இது என் தொழிலுக்கு விரோதமானது. இந்த வேலையை வேறு யாராவது வைத்து செய்துகொள்ளுங்கள்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதற்கு Roseanne குழப்பமடைந்துள்ளார். உடனே நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் எனக்கு புரியவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் முதல் பணியாளர் நீங்கள் அனுப்பிய புகைப் படத்தினை பாருங்கள் உங்களுக்கு புரியும் என கூறியுள்ளார்.

உடனடியாக அவர் அதை பார்க்கும் போது அதில் ஒரு புகைப்படத்தில் தான் மேலாடை இன்றி நிற்பது கண்ணாடியில் தெரிந்திருக்கிறது. இதனை கண்டதும் Roseanne அவமானம் அடைந்து தான் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அந்த புகைப்படம் எடுத்ததாகவும் தனது உருவம் அதில் பதிவாகி இருப்பது தனக்கு தெரியாது எனவும் கூறி அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பதில் அனுப்பியுள்ளார்.

ஆனால் அதற்கு அவரிடம் இருந்து எந்தவித பதிலும் திரும்ப வரவில்லை. அதேபோல் இரண்டாவது பணியாளர் ரோஸ் அளவுக்கு திரும்பி பதில் அனுப்பவில்லை. ஆனால் மூன்றாவது பணியாளரின் பணியை ஒழுங்குபடுத்துவது அவருடைய மனைவிதான் என்பதால் அவர் அந்த புகைப்படத்தை பார்க்கவில்லை. மேலும் இந்த செய்தியை கண்டதும் அவருடைய மனைவி இந்த படத்தை அவர் பார்க்கவில்லை. நான் தான் பார்த்தேன். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று Roseanneவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

 

Categories

Tech |