செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிட்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சாதனை படைத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்து வந்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள அனைத்தையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.
மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் துகள்களையும் சேகரித்து அனுப்பியது. இந்த பெர்சவரன்ஸ் ரோவருடன் இன்ஜெனியூனிட்டி என்ற ஒரு ஹெலிகாப்டரையும் பொருத்தி இருந்தனர். அந்த ஹெலிகாப்டரின் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன்படி கடந்த 11ஆம் தேதி இன்ஜெனியூனிட்டி செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நாஸா திடீரென மென்பொருள் கோளாறு ஏற்பட்டதால் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
எனினும் தற்போது செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. ஆகையால் பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் முதல் முறையாக ஹெலிகாப்டரை பறக்க வைத்து சாதனை படைத்துள்ளதாக நாசா விண்வெளி கூறியுள்ளது .