நெல்லையில் செல்போனை திருடிய வழக்கில் காவல்துறையினர் வாலிபரை கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இதிலிருக்கும் நோயாளிகளிடமிருந்தும், அவர்களது உறவினர்களிடமிருந்தும் செல்போன்கள் திருடு போனதால் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே அதே பகுதியிலிருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை திருட முயன்ற வாலிபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை காவல்துறையினர் விசாரணை செய்ததில் இவர்தான் அரசு மருத்துவமனையிலும் செல்போன்களை திருடியுள்ளார் என்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.