திருநெல்வேலியில் சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சிறுமியான எப்சிபா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடைக்கு செல்லும் போது அங்கு அறுந்து கிடைத்துள்ள உயர் மின்னழுத்தம் செல்லக்கூடிய மின்கம்பியை பார்க்காமல் மிதித்தார். இதனால் சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர் உரிய இழப்பீடு தொகை வழங்க கோரியும், மின்வாரிய ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்து திசையன்விளை காவல் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக அனைவரும் கலைந்து சென்றனர்.