உத்திரபிரதேசத்தில் அதிகமாக பரவி வரும் கொரோனாவால் குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது .
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுவதால் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தடுப்பூசி போடும் பணி மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த மனுவை 2 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் வேகமாக பரவிவரும் கொரோனவைரஸ் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்லப்படுவது ஒரு வாரத்திற்கு தடுக்கப்பட்டால் கொரோனா தொற்று சங்கிலியை உடைக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதனால் முன்கள பணியாளர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் உதவி அளிக்கும் வகையிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆகையால் பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர், கோரக்பூர் போன்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை அரசு அமல்படுத்த அறிவுறுத்தபடுவதாக கூறியுள்ளார்கள் .