Categories
தேசிய செய்திகள்

நீதிபதிகளுக்கு தடுப்பூசியை வலியுறுத்த மறந்த அரசு…. உயிரிழந்த டெல்லி நீதிபதி….!!!

டெல்லியில் கொரோனவைரசின்  2 ம் அலை மிகவேகமாக பரவி வருவதால் நீதிபதி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிய உருவம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் மிக வேகமெடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா  தொற்றினால் வயது வரம்பின்றி பொதுமக்கள் நீதி துறையினர் அரசியல் கட்சியினர் அனைத்து தரப்பினர்களும் மிகுந்த அளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து டெல்லியில் குடும்ப நல நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் கோவை வேணுகோபால் (47) இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் மருத்துவர்களால் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் வேணுகோபால் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து நீதிமன்ற பார் அசோசியேஷன் கூறியது நீதிபதிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு முக்கியத்துவம் அளிக்காததே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

Categories

Tech |