பிரிட்டனில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு ஆர்டர் செய்ததில் சாப்பாட்டில் தவளை ஓன்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் மார்ட்டின் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தேநீருடன் எதையாவது சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்து உணவகம் ஒன்றில் உணவை ஆர்டர் செய்துள்ளனர். இதனையடுத்து உணவு வந்ததும் மார்ட்டினின் மனைவியான Michelle Adcock சாலட்-ஐ சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அவரது தட்டை பார்த்ததில் அதில் ஒரு தவளை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அந்த தவளை தட்டிலிருந்து துள்ளிக்குதித்து ஓடியது.
இதனைத்தொடர்ந்து மார்ட்டின் மற்றும் அவர்களது மகனான மேக்ஸ் இருவரும் சேர்ந்து உடனடியாக அந்த தவளையை பிடித்து ஒரு பெட்டிக்குள் அடைத்துள்ளனர். அதன்பின் அந்த உணவகத்தை செல்போன் மூலம் தொடர்புகொண்ட Michelle Adcock உங்கள் பொருள் ஒன்று தவறுதலாக எங்களிடம் வந்து விட்டது என்றும், அதை வந்து எடுத்துச் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து மார்ட்டின் வீட்டிற்கு வந்த உணவக ஊழியர்களுக்கு தவளை ஒன்று தவறுதலாக உணவில் விழுந்தது தெரியவந்தது. மேலும் இந்த தவறுக்காக உணவக ஊழியர்கள் மன்னிப்பு கேட்டதோடு இதற்கு நஷ்ட ஈடாக 75 பவுண்டுகளையும் கொடுத்துள்ளனர்.