கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.
மக்களிடம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரையும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்கும் இயலும் என நம்புகிறேன். இப்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு வர முடியும். கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்து வருகிறது. கொரோனாவில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கேற்கிறேன் என மோடி பேசினார்.