Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக்கில் நூதன திருட்டு…. ஏமாந்து போன சிவில் இன்ஜினியர்….

அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஐபோனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக ஏமாற்றிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அகமதாபாத் சேர்ந்த கந்தர்ப் பட்டேல் (27) சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஃபேஸ்புக் விளம்பரம் ஒன்றில் ஐ போன் 11 என்ற  மொபைலை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாக பதிவிடபட்டிருந்தது. ஆகையால் கந்தர் பட்டேல்  ஆசைப்பட்டு அதில் உள்ள காண்டாக்ட் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவருடன் பேசிய நபர் தன்னை ‘ராணுவ அதிகாரி ‘என்று அறிமுகப்படுத்தியுள்ளார். முதலில் தபால் செலவுக்காக ரூ. 4000 கேட்டுள்ளார். அதன் பிறகு மொத்த விலையில் இருந்து பாதி விலையை முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ரூ. 24000 எனது வங்கி கணக்கிற்கே அனுப்பி வைப்பதாக கூறினார். அவர் அவ்வாறு கூறியதும் அதை உண்மை என்று நம்பி நானும் இதுவரை 60 ஆயிரம் வரை அனுப்பி வைத்தேன்.

ஆனால் இது வரை போனும்  வந்து சேரவில்லை நான் அனுப்பிய பணமும் திரும்ப வரவில்லை. அதன் பின்பு தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கந்தர் பட்டேல் என்னை ஏமாற்றிய  குற்றவாளியை உடனே பிடித்துத் தாருங்கள் என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஃபேஸ்புக் திருடனை தேடி வருகின்றனர்.

Categories

Tech |