ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது .
ஐசிசி டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இங்கு பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரர்களுக்கு அனுமதி அழிக்கப்படுவதில் சிக்கல் நிலவியது.
இந்த நிலையில் பிரிட்டன் அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் திட்டமிட்டபடி இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான இறுதி போட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் சவுத் தான்டன் நகரில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.