Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் வீட்டிலேயே… அத்துமீறிய மர்ம நபர்கள்… சென்னையில் பரபரப்பு…!!

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வர்கீஸ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து இவரின் மகன் பெஞ்சமின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மரக்கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |