லாரிகள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப கவுண்டனூர் பகுதியில் ஆறுமுகம் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவர் தனது லாரியை கல்லுக்குழி முத்தூர் சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது லாரி மீது எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அதன்பின் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் லாரி மிகவும் சேதமடைந்து விட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான கார்த்திக் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.