நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு ஒரு சில மணி நேரமே சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாகவும், மத்திய அரசு உடனடியாக ஆக்சிஜனை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.