வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தனது இரண்டு பிள்ளைகளும் இழந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி லத்தேரி பேருந்துநிலையத்தில் இருந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் வித்யா லட்சுமியின் தந்தை மோகன், குழந்தைகள் தனுஜ், தேஜஸ் உயிரிழந்தனர்.
அதனால் மன உளைச்சலுக்கு ஆளான வித்யாலட்சுமி,தன் குழந்தைகள் இல்லாத உலகில் தானும் வாழ கூடாது, இனிமேல் நமக்கு ஒன்றும் இல்லை என்று நினைத்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தண்டவாளத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.