Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்… இங்க மட்டும் வைக்காதீங்க…! ஆவேசமாக திரண்ட சேலம் மக்கள்… திகைத்து போன நோயாளிகள் …!!

சேலம் கோட்டை மைதானம் அருகே கொரோனா மருத்துவ மையம் அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோய் தொற்றை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிக்க பல்வேறு இடங்களில் கொரோனா மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோட்டை மைதானம் அருகே மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தில் கொரோனா மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டை அரங்கம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார்,  பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Categories

Tech |