நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8000 நெருங்கிய நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் 50 சதவீத படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும். சிகிச்சை தொடர்பான விவரங்களை தினமும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.