டியூஷனுக்கு சென்ற பள்ளி மாணவிக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் டியூஷனுக்கு சென்றபோது கலைவாணன் என்பவர் இந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பந்தலூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அந்த மாணவி சென்றுவிட்டார். இதனையடுத்து பந்தலூர் சென்ற கலைவாணன் அங்கு மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த அனைத்து சம்பவத்தையும் மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி போக்க சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலைவாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.