Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிகாரியே இப்படி பண்ணலாமா..! பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை… கைது செய்த காவல்துறை..!!

பெரம்பலூரில் கல்குவாரி உரிமையாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிப்பதற்காக ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக பெற்ற காவல்துறை துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் ராம்நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோனேரிபாளையம் அருகே கல்குவாரி ஒன்று உள்ளது. செந்தில்குமாரின் கல்குவாரியில் இருந்து இரண்டு லாரிகள் கற்களை ஏற்றிக்கொண்டு கடந்த 18-ம் தேதி பெரம்பலூர்-ஆத்தூர் சாலை வழியாக கோனேரிபாளையம் புறவழிசாலையில் வந்து கொண்டிருந்தது. அங்கு காவல்துறை துணை ஆய்வாளர் சரவணகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 லாரிகளையும் மறித்து சோதனை செய்தார். இதையடுத்து அந்த லாரியில் அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக கூறி இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தார். மேலும் கனிம மற்றும் சுரங்க வளங்களை அதிகப்படியாக எடுத்துச் செல்லுதல் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் காவல்துறை துணை ஆய்வாளர் பால்ராஜ் லாரியில் கற்களை ஏற்றி சென்றதற்காக கல் குவாரி உரிமையாளர் செந்தில் குமாரிடம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் லாரிகளை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 1 லட்சம் வேண்டும் என்று லஞ்சம் கேட்டுள்ளார்.

அதில் செந்தில் குமாருக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து கல் குவாரி உரிமையாளர் செந்தில்குமார் அதற்கு உடன்படாத நிலையில் காவல்துறை துணை ஆய்வாளர் பால்ராஜ் அவரிடம் ரூ.50 ஆயிரம் பேரம் பேசியுள்ளார். ஆனால் செந்தில்குமாருக்கு லஞ்சம் கொடுப்பதில் விருப்பம் இல்லாததால் இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செந்தில்குமாரின் சார்பில் அவருடைய கல்குவாரியில் வேலை பார்க்கும் ஊழியர் ஜார்ஜ்பெர்னான்டஸ் என்பவரிடம் ரூ. 50 ஆயிரத்தை கொடுத்து இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி அந்த ஊழியர் பணத்தை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், காவல்துறை துணை ஆய்வாளர் பால்ராஜை பிடிப்பதற்காக வெளியில் காத்திருந்தனர். அதன்பின் அந்த கல்குவாரி ஊழியரிடம் பால்ராஜ் ரூ.50,000 பணத்தை வாங்கும் போது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Categories

Tech |