இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் காலிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் தோல்வியுற்று வெளியேறியது . இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் . இதன்பின் இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீப்பர் வாய்ப்பு இளம் வீரர் ரிஷப் பண்ட்கு கிடைத்தது.
இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே முதலில் டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ரிஷாப் பண்ட் அதிக ரன் ஏதும் எடுக்கவில்லை . இதனால் , விமர்சனத்திற்கு உள்ளானார் . இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டியில் பொறுப்புடன் விளையாடி 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இப்போட்டியின் எம். எஸ்.தோனியின் சாதனையை ரிஷாப் பண்ட முறியடித்துள்ளார். எம்.எஸ்.தோனியின் t20 கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச ரன் 56 ஆகும் . இதுவே இந்திய கிரிக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது . இந்த சாதனையை ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியில் முறியடித்தார். இதனால் ரிஷாப்பண்ட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.