Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்… பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போக்குவரத்து கழகத்தினுடைய விதிமுறைகளில் மாற்றம் செய்யக்கூடாது. மேலும் வார விடுமுறை வழங்கப்படுவதை பறிக்கக்கூடாது.

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்கக்கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |